2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேநீர் அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் அரசு வேண்டுகோள்

Ilango Bharathy   / 2022 ஜூன் 17 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 அண்மைக்காலமாகப்  பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இந்நிலையில்  இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், தேநீர் அருந்துவதைக்  குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் அரசு  வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது குறித்து பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில் ” உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.
எனினும் தற்போது நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு பணம் செலுத்த முடியவில்லை.

அதனால் நாட்டு நலன் கருதி, பாகிஸ்தான் மக்கள் தினமும் பருகும்  தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் அமைச்சரின் இக்கோரிக்கைக்கு, அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .