Freelancer / 2025 ஜூன் 03 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவில் அடைமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நைஜீரியா நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட மொக்வா நகரில் அடைமழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
தொடர் மழையால், பொதுமக்களின் இடுப்பு வரை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளம் அதிகரித்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால், மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 2 வீதிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 2 பாலங்கள் உடைந்துள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். 500க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதுபற்றி உள்ளூர் அதிகாரி மூசா கிம்போகு செய்தியாளர்களிடம் கூறும்போது, மீட்பு முயற்சிகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என கூறினார். இதனால், மொத்தத்தில் 700 பேர் பலியாகி உள்ளனர் என அஞ்சப்படுகிறது.
இந்த பகுதியில், 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம் ஏற்பட்டு நிலைமையை மோசமடைய செய்துள்ளது. அணை ஒன்று உடைந்து வெள்ள நீர் வெளியேறி வருகிறது என கூறப்படுகிறது. எனினும், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.
நைஜீரியாவில், 2022ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 600க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 13 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் இதுபோன்ற தொடர் அடைமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
15 minute ago
29 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
50 minute ago