Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 14 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் உள்ள சீன நிறுவனங்கள் கட்டுமானத் துறை மற்றும் போலி ஆவணங்களை அச்சிடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தடை செய்யப்பட்ட பொருட்களின் வர்த்தகத்தில் மேலுமொரு வழக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சீன நிறுவனம் தடைசெய்யப்பட்ட பொருட்களை பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிப்பதை பங்களாதேஷ் அதிகாரிகள் மே மாதத்தில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நிறுவனம் சோடா ஆஷ் லைட் என்ற லேபிளின் கீழ், டாக்காவிலுள்ள நிறுவனத்துக்கு மறைத்து அனுப்பிய 19 தொன் (788 பக்கெட்) சோடியம் சைக்லேமேட்டை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சோடியம் சைக்லேமேட் என்பது ஒரு வகை சீனி எனவும் இது சாதாரண சீனியை விட 30 முதல் 50 மடங்கு இனிமையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் அரசாங்கம் சோடியம் சைக்லேமேட்டை சட்டவிரோதமான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளாக அறிவித்துள்ளதுடன், அததை ஏற்றுமதி/இறக்குமதி, உற்பத்தி அல்லது எந்த வடிவத்திலும் பயன்படுத்துவது நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதேவேளை, பங்களாதேஷில் சீன அதிகாரிகள் ஊழல் செய்த மற்றொரு வழக்கில், கோக்ஸ் பஜாரில் உள்ள டெக்னாஃப், சப்ராங் சுற்றுலா பூங்காவில் மணல் நிரப்பும் ஒப்பந்ததாரராக பணிபுரிந்த சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அதிகாரிக்கு 2.5 இலட்சம் டக்கா மற்றும்மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பங்களாதேஷில் சீன நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளில் இது முதல் வழக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
2021 டிசெம்பரில் பங்களாதேஷில் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மானப் பணியில் ஈடுபட்டுள்ள சைனா றோட் அன்ட் பிரிட்ஜ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், அரச திட்டங்களுக்கு கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
2022 ஜனவரியில், ஒரு சீன நிறுவனம் போலி பேண்ட்ரோல்களை (பீடி மற்றும் சிகரெட் பக்கெட்டுகளில் சுற்றப்பட்ட மெல்லிய ரிப்பன்) விநியோகித்துபங்களாதேஷுக்கு 250 கோடி டக்கா வரி ஏய்ப்பு செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் போலியான பங்களாதேஷ் கடவுச்சீட்டுகள், வாக்குச் சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், பிறப்புப் பதிவுச் சான்றிதழ்கள் போன்றவற்றை அச்சிடுவதில் ஈடுபட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றொரு வழக்கில், சீன நிறுவனமான கொம்பிளை அவுட்டோர் கோவின் துணை நிறுவனமான டியானே அவுட்டோர் கோ லிமிடெட் சுமார் 21 கோடி டக்கா வரி ஏய்ப்பு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் குளோபல் பெட் புறொடக்ட் கோ லிமிட்டெட்டின் துணை நிறுவனமான சினோ ஹெம்மாட் ட்ரேடிங் கோ என்ற சீன நிறுவனம், 120 டன் தொன் மதிப்புள்ள டெக்ஸ்ட்ரோஸ் மோனோஹைட்ரேட்டை கால்சியம் கார்பனேட்டின் கீழ் சட்ட விரோதமாக பங்களாதேஷில் உள்ள அதன் பங்காளி ஒருவருக்கு அனுப்பியது.
இவ்விடயம் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், கருவூலத்துக்கு 42 லட்சத்து 13 ஆயிரம் டக்கா இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய முறைகேடுகள் பங்களாதேஷில் உள்ள சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒரு பக்கச்சார்பற்ற ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற வழக்குகளைத் தடுக்க வங்காளதேச அதிகாரிகள் தங்கள் நிறுவன சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago