2025 மே 14, புதன்கிழமை

பங்களாதேஷ் எதிர்க்கட்சி தலைவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் எதிர்க்கட்சியான தேசியக் கட்சியின் தலைவர்  மிர்சா ஃபக்ருல்  நாட்டை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷீக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.

பங்களாதேஷ்  2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தல் நியாயமாக இடம்பெறவேண்டும் என்றால்,  பிரதமர்  ஷிக் ஹசீனா  பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று எதிர் கட்சியினர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர். மேலும் மிர்சா ஃபகுருல் தலைமையில் கடந்த வாரம் பிரதமர் ஷீக் ஹசீனாட பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தலைநகரத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் தலைநகரமான டக்கா வில் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் கள் மற்றும் பொலிஸாருக்கு இடையேயான மோதல்  ஒரு போர்க்களமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X