2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பணய கைதிகளை கண்டுபிடிப்போருக்கு சன்மானம்

Freelancer   / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா முனையில், பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா 13 கோடி ரூபாய் (இலங்கை பெறுமதி) சன்மானம் வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திவரும் தாக்குதலில்,  இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X