Freelancer / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வருவதாக இந்தியா நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் இதுவரை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு 30 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கவாஜா ஆசீப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த மோசமான காரியத்தை அமெரிக்கா மட்டுமின்றி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்த தவறால் நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.AN
14 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago