Freelancer / 2025 ஜூன் 11 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில், இராணுவ வீரர்களை கொன்ற 9 பயங்கரவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், கடந்த 2018ம் ஆண்டு இராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவினர்.
பின்னர் இராணுவ வீரர்களை குறிவைத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இராணுவ வீரர்களும் பயங்கரவாதிகள் சிலரை கொன்றனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி ஈரான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
15 minute ago
29 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
50 minute ago