2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது அரசாங்கம் மீது தான் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரெஞ்சுப் பிரதமர் பொஸ்வா பைரூ தோல்வியடைந்துள்ளார். 

பிரதமர் பைரூவை பதவியிலிருந்து வெளியேற்றவும், அவரது சிறுபான்மை அரசாங்கத்தை கவிழ்க்கவும் பிரெஞ்சு தேசிய சட்டசபையானது 364 -194 என்ற வகையில் வாக்களித்திருந்தது. இன்னொரு 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில் நாளை காலை தனது இராஜினாமாவை பிரதமர் பைரூ, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் கையளிக்கவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X