2024 மே 08, புதன்கிழமை

பர்கினா பாசோவில் கொடூரம் ; 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Freelancer   / 2022 ஜூன் 15 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆபிரிக்க நாடான பர்கின பாசோவில் (Burkina-Faso) புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் பயங்கரவாதக்  குழுவொன்று நடத்திய கண்மூடித்தனமான  துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 100 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நைஜருக்கு அருகே உள்ள  கிராமத்திலேயே கடந்த 11 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அல்கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X