2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் பெண் மீது தீ வைத்த நபர் கைது

Ilango Bharathy   / 2022 ஜூன் 22 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பஸ்ஸில் பெண்ணொருவர்  மீது மர்ம நபர்   ஒருவர் தீ வைத்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவ தினத்தன்று குறித்த நபர் அப் பெண் மீது திரவமொன்றை ஊற்றி, தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் படுகாயங்களுக்குள்ளான அப் பெண்  உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தப்பிச் சென்ற  மர்ம நபரைப் பொலிஸார்  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X