2025 மே 14, புதன்கிழமை

பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன்

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது. இதனால் குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.

கெவின் மெக்கார்த்தி, ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர்.

புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் சபாநாயகர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் புதிய குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் 220 வாக்குகள் பெற்று மைக் ஜான்சன், பாராளுமன்ற பிரநிதிநிதிகள் சபை சபாநாயராக வெற்றி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X