2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டு : மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை

Editorial   / 2022 நவம்பர் 17 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  மத போதகர் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார் (Adnan Oktar) என்ற மதபோதகர்  A9 என்ற ஒன்லைன் தொலைக்காட்சி  வழியாக மதப்பிரச்சாரங்களை நடத்தி  வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதனையடுத்து 66 அவருக்கு  அவருக்கு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இத்தீர்ப்பு எதிராக அட்னான் அக்தார் மேன் முறையீடு செய்திருந்த நிலையில் குறித்த வழக்கை விசாரித்த இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அக்தாருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X