Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூன் 12 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்ளும் புழுக்களை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துச் சாதனை படைத்துள்ளனர்.
சூப்பர் புழுக்கள் (superworm) என அழைக்கப்படும் இப்புழுக்களில் குடலில் பொலிஸ்டீரைன் மற்றும் ஸ்டீரைனை அழிக்கக்கூடிய நொதியம் இருபது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிஸ்கே," இந்த சூப்பர் புழுக்களுக்கு பொலிஸ்டீரைன் மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டது. அவை உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல் அவற்றின் எடையும் அதிகரித்திருப்பதை கண்டறிந்துள்ளோம். இவற்றின் குடலில் உள்ள நொதிகளின் மூலமாக பொலிஸ்டீரைனை எளிதில் உட்கொள்கின்றன இப் புழுக்கள். இவை ஒரு சிறிய மறுசுழற்சி ஆலைகளை போன்று செயல்படுகிறது. அவை பொலிஸ்டீரைனை துண்டுகளாக்கி, அவற்றை தன் குடலில் உள்ள பக்றீரியாக்களுக்கு அனுப்புகிறது" என்றார்.
மேலும்” இவ் வகை புழுக்களை அதிகளவில் உருவாக்குவது சிரமான காரியம் என்றாலும், இவற்றின் குடலில் சுரக்கும் நொதியை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் இருக்கும் பக்றீரியா மூலமாக பிளாஸ்டிக் மறுசுழற்சியை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லலாம் ”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இக் கண்டுபிடிப்பானது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago