ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு , வட கொரிய ஜனாதிபதி கிம்ஜொங் உன், சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தினம் கடந்த 1992 முதல் வருடந்தோறும் ஜூன் 12 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் 3 மாதங்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய மக்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுவதில் பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என வட கொரிய ஜனாதிபதி கிம்ஜொங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”ரஷ்யா தன் நாட்டின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்கும் முறைகளை நன்கு அறிந்துள்ளது எனவும், இதன் காரணமாக ரஷ்யாவால் தன் இலக்கை அடைவதில் பெரும் வெற்றியைப் பெறமுடிந்தது எனவும், வடகொரிய மக்கள் ரஷ்யமக்களுக்கு முழுஆதரவு மற்றும் ஊக்கத்தை வழங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ”உலக பாதுகாப்பை உறுதிசெய்யவும், சர்வதேச நீதியைப் பாதுகாப்பதற்கான பயணத்திலும் இருநாடுகளுக்கும் இடையேயான ராஜாங்க ஒத்துழைப்பு நெருக்கமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.