2026 மே 07, வியாழக்கிழமை

பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய உத்தரவு

Ilango Bharathy   / 2022 மே 09 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அணிந்திருக்க வேண்டும் எனத் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில்  இருந்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி இடம்பெற்று வருகின்றது.
 
இந்நிலையில் பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்புக் கருதி அவர்கள் பொது இடத்துக்குச் செல்லும்போது உடல் முழுவதையும் மறைக்கும்படி புர்கா அணிந்திருக்க வேண்டும் எனத் தலிபான் அரசின் நல்லொழுக்க அமைச்சகம் நேற்று முன் தினம் (07) உத்தரவிட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .