2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

மணப்பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்த மணமகன்

Freelancer   / 2022 ஜூன் 18 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உஸ்பெக்கிஸ்தானில் திருமணத்தின்போது மணப்பெண்ணிடம் விளையாட்டில் தோற்றதால் அவரை அடித்த மணமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிட்டாய் தாள்களை யார் முதலில் அவிழ்க்கிறார் என்ற விளையாட்டைத் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மணப்பெண் வெற்றி பெற்றார்.

கோபமடைந்த மணமகன் மணப்பெண்ணின் தலையின் பின்பக்கத்தில் வேகமாக அடித்தார்.

அந்தச் சம்பவம் ஜூன் 6ஆம் திகதி சூர்கந்தர்யோ என்ற பகுதியில் நடந்தது. அந்தத் தம்பதியிடமும் அவர்களின் பெற்றோரிடமும் சம்பவம் குறித்து பொலிஸார் பேசியதாக அரசாங்க குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஊர் மூத்தோர், தம்பதியின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஊர்ச் சந்திப்பில் மணமகன் மணப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

திருமண நாளன்றே தம்பதி சமரசம் செய்துகொண்டதாகவும் அவர்கள் தற்போது ஒன்றாக வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மணமகனுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள் தடுப்புக் காவல் தண்டனையாக விதிக்கப்படலாம். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X