Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம் அன்றாட வாழ்க்கையில் இதுவரை பல வகையான சந்தைகளை பார்த்திருப்போம், கேள்வியும்பட்டிருப்போம். ஆடை சந்தைகள், காய்கறி சந்தைகள், செல்லப்பிராணி சந்தைகள், தானிய சந்தை என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற ஒன்று உள்ளது. இந்த சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கும் ஒரு சந்தை ஆகும் . இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனப்பெண்களை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்.
இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்றாலே எக்கச்சக்க செலவாகும், அந்த செலவுகளை செய்ய இயலாத பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி மனைவியாக ஏற்று வாழத் தொடங்குகின்றனர்.
சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர்.
இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்தவனாக இருக்க வேண்டும். மேலும், இந்த சந்தையில் விற்கப்படும் பெண் ஏழையாக இருப்பது அவசியம். பொருளாதார பலமுள்ள குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்க முடியாது. இத்துடன் வாங்கிய பெண்ணுக்கு மருமகள் என்ற அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
2 hours ago