2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைந்தது

Freelancer   / 2023 நவம்பர் 16 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தற்போது ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், மருத்துவ நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந் நிலையில் மருத்துவமனையின் வளாகத்திற்குள் ராணுவத்தின் டாங்கிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் மருத்துவமனை கட்டடத்திற்குள் சென்றுள்ளனர். அவசரப்பிரிவு, சத்திர சிகிச்சை நடைபெறும் இடங்கள், திவிர சிசிக்சை பிரிவுகள் என எல்லா இடங்களில் சென்று ஹமாஸ் அமைப்பினர் செயல்பாடு உள்ளதா? என ஆராய்ந்துள்ளனர். இந்த தகவலை அல் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் முகமது தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X