Freelancer / 2026 மார்ச் 30 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 2 எரிவாயு (எல்.பி.ஜி) கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5 இல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இராக் ஆகிய 5 நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 4 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் மேலும் 2 எல்.பி.ஜி. கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது.
இந்த கப்பல்களில் 90,000 தொன்களுக்கு அதிகமாக சமையல் எரிவாயு கொண்டுவரப்படுகிறது. இந்த 2 கப்பல்களும் வளைகுடாவை கடந்து இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் 5 எரிபொருள் கப்ப்லகள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஐக்கிய அரபு அமீரகம் அருகே காத்துக் கிடக்கின்றன. (a)

1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago