2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஷ்ய போர்: அமெரிக்கா, சீனாவின் பிளவு அம்பலம்

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் பற்றிய கருத்தியல் பிளவுகளை, ரஷ்ய-உக்ரைன் யுத்தம் அம்பலப்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா-சீனா போட்டி என்பது பெரும் வல்லரசு போட்டி மட்டுமல்ல என்றும் கருத்தியல் சர்ந்ததும் கூட என்று ஆசியா நிக்கெய் தெரிவித்துள்ளது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் உள்ள சிரமம் மற்றும் தாய்வான் மீதான இராணுவ மோதலின் அபாயங்களையும் நிபுணர்கள் எடுத்துரைத்துள்ளதுடன், தாய்வான் பிரச்சினையில் இரு நாடுகளின் நிலைப்பாட்டால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த பிளவு மேலும் தூண்டப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தனித்தனியாக இரு தரப்பினரும் ஆளப்பட்ட போதிலும் தாய்வான் மீது பீஜிங் முழு இறையாண்மையைக் கோருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் மூலோபாய உறவுகளை அதிகரிப்பதன் மூலம் சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதை தாய்பேய் தொடர்கிறது.

தாய்வானைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் சக்தியைப் பயன்படுத்துவதன் செலவுகள் மற்றும் விளைவுகளை மதிப்பிடும் சீனாவின் தலைமைக்கு ரஷ்யா-உக்ரைன் மோதல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உக்ரைன் போர் நடந்துகொண்டிருக்கும் சூழலில் அமெரிக்கத் தடைகளின் வரம்புக்குள் வருவதைத் தவிர்ப்பதற்காக, ரஷ்ய எண்ணெயை சீனாவின் சுயாதீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் விவேகத்துடன் அதிக தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்கத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பொருட்களை ரஷ்யாவுக்கு தொடர்ந்து வழங்கினால், இரண்டாம் நிலைத் தடைகள் ஏற்படும் அபாயத்தை சீன நிறுவனங்கள் மதிப்பிட்டு வருகின்றன.
 
ரஷ்யாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை பீஜிங் வலுப்படுத்த வேண்டும் என்று சீன வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.

தகவல்களைப் பெறுவதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் மூலோபாயத் தொடர்பை ஏற்படுத்துவது சீனாவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .