Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,தனது குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக சவுதி அரேபியாவிலுள்ள தீம் பார்க் ஒன்றுக்குள் 2 மணி நேரம் வெளிநபர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல் நஸ்ர் கிளப்பிற்கு இரண்டரை ஆண்டுகள் விளையாட 4 ,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான ரொனால்டோ, தனது பெண் தோழி ஜார்ஜினாமற்றும் அவர்களது 4 குழந்தைகளுடன் சவுதிக்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில் அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பொழுதினைப் போக்குவதற்காக ரியாத்திலுள்ள குறித்த பூங்காவானது 2 மணி நேரம் வரை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் திருமணமாகாத ஆண், பெண் சேர்ந்து வாழ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரொனால்டோவிற்கு மாத்திரம் பிரத்யேகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
3 hours ago