Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து முடங்கியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக கடந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரை முடிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டது. இதையடுத்து, அணுசக்தி செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா உட்பட தங்கள் ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதலை நிறுத்துவது என, 10 நிபந்தனைகளை ஈரான் முன் வைத்தது.
இவை ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு வார போர் நிறுத்தத்தையும் அறிவித்தார். இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவு தெரிவித்தாலும், 'இது லெபனானை உள்ளடக்கியது அல்ல; ஹெஸ்பொல்லா அமைப்புக்கு எதிரான போர் தொடரும்' என, திட்டவட்டமாகக் கூறினார்.
அதன்படி போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் லெபனானுக்கு எதிராக பெரும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. வெறும், 10 நிமிடங்களுக்குள் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 254 பேர் உயிரிழந்தனர்; 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது. ஈரானிலிருந்து 17 ஏவுகணைகள் மற்றும் 35 ட்ரோன்கள் மேற்காசிய நாடுகள் மீது ஏவப்பட்டுள்ளன. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட, 24 மணி நேரத்துக்குள்ளேயே மேற்காசியா மீண்டும் கொந்தளிக்க துவங்கியுள்ளது. R
25 minute ago
37 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
55 minute ago