Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.
ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் இருவர் மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் என 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்தில் கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர்.
பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா, செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கி இருந்தது.
இந்நிலையில் அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அறுவடை செய்து சீனா விண்வெளி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
13 May 2025