2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விந்து கலந்து உணவு தயாரிக்கும் உணவகம்

Ilango Bharathy   / 2023 மே 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உணவகமொன்று  விந்து கலக்கப்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில்  மாட்ரிட் நகரில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்றே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அவ்வுணவகத்தின் உரிமையாளரும் பிரபல சமையல் நிபுணருமான டேவிட் முனோஸ் கருத்துத் தெரிவிக்கையில் ”எனது உணவகத்தின் உணவுப் பட்டியளில் மீனின்  விந்துக்களினால்  செய்யப்பட்ட உணவுகளை இணைக்கவுள்ளேன். பஃபர் ஃபிஷ், மாங்க் ஃபிஷ் மற்றும் காட் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் விந்துக்களைக் கொண்டே இந்த உணவுகள் தயாரிக்கப்படவுள்ளன.

ஜப்பானில் இது போன்ற உணவு வகைகள் சர்வ சாதாரணம்.அதை நான் சுவைத்துப் பார்த்துள்ளேன்.  அதனால் ஈர்க்கப்பட்டே இம் முடிவை எடுத்துள்ளேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X