Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 20 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
உலக அளவில் வியட்நாம் சுற்றுலா சார்ந்து பிரபலமான பயண இடங்களில் (டெஸ்டினேஷன்) ஒன்றாக அறியப்படுகிறது. வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஹலாங் பே (Halong Bay) விரிகுடா பகுதி உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (19)அன்று 53 பேருடன் சுற்றுலா படகு ஒன்று கடல் பகுதியில் அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2 மணிக்கு சென்றது.
அப்போது திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்தவர்கள் கடலில் விழுந்துள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என தகவல். 14 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
14 minute ago
20 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
36 minute ago
40 minute ago