Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில், குளிர் காலங்களில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வாடிக்கை. அதிலும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புகள் கூட சுற்றித்திரிவது அம்மகளுக்கு பழக்கப்பட்ட ஒன்று.
இந்நிலையில், குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் கிராமப்பகுதி ஒன்றில் வீட்டின் கூரை மீதிருந்து 16 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று, மரத்திற்கு மரம் தாவி சென்றது. இந்த சில்லிட வைக்கும் காட்சியை கண்ட அந்த பகுதி மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், கார்பெட் வகை மலைப்பாம்புகள் மரத்தின் மீது ஏறுவது சாதாரண விஷயம் தான் என்கின்றனர். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டு கழிவறையின் கூரையின் மீது மலைப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
3 hours ago