2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம்

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எல்லையோர மாகாணங்களில், இராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில், பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா இராணுவ வீரர்களை நிலைநிறுத்தியுள்ளது.

அந்தவகையில், கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற இராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் இராணுவ அவசர நிலையை அறிவித்து, கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X