2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வைரம் கலந்த நகப்பூச்சு

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலை உயர்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் விலை உயர்ந்த கார், விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் போன்றவற்றை கேள்விபட்டிருப்போம். அந்த வரிசையில் தற்போது நகப்பூச்சு (நெயில் பாலிஷ்) இடம்பிடித்துள்ளது,

பொதுவாக பெண்கள் சிலர் நகங்களை பராமரித்து பல நிறங்களில் நகப்பூச்சு போட்டுக்கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்தமான நிறங்களில் நகப்பூச்சு அறிமுகமாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நகப்பூச்சு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷியை லோஸ்ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த நகப்பூச்சு தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாதாரணமாக இருக்கும் ஆனால் அதன் உள்ளே 267 கார்ட் கருப்பு வைரம் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X