Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 31 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயின் புனோல் நகரத்தில் தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரு டிராக்கர் முழுவதும் கொண்டுவரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது மற்றவர்கள் வீசி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடினர்.
ஸ்பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் டொமடினா என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். தக்காளி திருவிழாவால் தெருக்கள், வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் தக்காளியில் நனைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறுத்தில் காட்சியளித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago