2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணமட்டக் குழு விளையாட்டுப் போட்டி

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாண மட்ட குழு விளையாட்டுக்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் 19வயது பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியின்  இறுதிப் போட்டிக்கு மட். மகாஜன கல்லூரி அணியும் மட். அம்பிளாந்துறை கலை மகள் வித்தியாலய அணியும் தெரிவாகியிருந்தன.
 
மட். அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அணி முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை  15வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி கரப்பந்தாட்ட போட்டியில் மட். அம்பிளாந்துறை கலை மகள் வித்தியாலய அணி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

இதனை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் கு.நமசிவாயம் அதிபர்.த.ரவிராஜ்  பிரதி அதிபர் சா.விக்கினேஸ்வரன் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .