2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சைக்கிள் ஓட்ட போட்டி

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.சசிக்குமார்

விளையாட்டு துறை அமைச்சு நடத்தும் 40ஆவது தேசிய விளையாட்டு விழாவின் சைக்கிள் ஓட்ட போட்டிகள் இன்று சனிக்கிழமை (24) திருகோணமலையில் நடைபெற்றது.

ஆண்களுக்கான 170 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப் போட்டி காலை 8.30 மணிக்கும்  பெண்களுக்கான  70 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டி மாலை 3.00 மணிக்கு பிரடறிக் கோட்டை முன்பாக இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஒன்பது மாகாணங்களில் இருந்தும் போட்டியார்கள் பங்கு கொண்டார்கள்.

ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில் ஒவ்வொரு மாகாணத்திருந்தும் 10 வீரர்களும். பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் 6 வீராங்கனைகளும் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியினை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, நகர சபை தலைவர் க.செல்வராசா ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள்.

பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியினை விளையாட்டு துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி ஜயகொடியு ஆரம்பித்து வைத்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .