2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இராமகிருஸ்ணா கழகம் முதலிடம்

Super User   / 2014 ஜூன் 02 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.துசியந்தன், வடிவேல் சக்திவேல்

காஞ்சிரங்குடா காமாட்சி விளையாட்டுக்கழகத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு  கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (31, 01) காஞ்சிரங்குடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இப் போட்டியில் 20க்கு மேற்பட்ட கழகங்கள் பங்கேற்றதுடன் இறுதிப் போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் மற்றும் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக்கழகமும் தெரிவாகியதுடன், முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப் பெற்றது.

இந் நிகழ்வுக்கு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கேரத் கிராமசேவை உத்தியோகத்தர் ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .