2025 ஜூலை 09, புதன்கிழமை

தகுதிகாண் போட்டியில், இளவாலை யங்கென்றீஸ் வெற்றி

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


வட மாகாண ஆளுனர் வெற்றிக் கிண்ணத்துக்கான  மாகாண மட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டியில், வடமாகாண ஆளுநர் வெற்றிக் கிண்ணத்துக்கான வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் 'ஏ' பிரிவு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 11 பேர் பங்குபற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில், பண்டத்தரிப்பு பிறைற் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் இளவாலை யங்கென்றீஸ்  விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளன.

மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல்; நடை பெற்ற அரையிறுதிப் போட்டி ஆட்டமொன்றில்,  சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழகமும் பண்டத்தரிப்பு பிறைற் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக காணப்பட்ட நிலையில், போட்டி முடிவடையும் வரை மிகவும் விறு விறுப்பாக காணப்பட்டது. முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும்  தலா ஒரு கோலைப் பெற்று சம நிலையில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பெற முயன்ற போதிலும் மீண்டும் ஒரு கோலை பிறைற் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் இறுதி மூன்று நிமிடத்தில் பெற்றுக் கொண்டது. இந்நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் பண்டத்தரிப்பு பிறைற் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் கணக்கில் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழகத்தை வெற்றி பெற்று மாகாண மட்டப்போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில், தெல்லிப்பழை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகமும் இளவாலை யங் கென்றீஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் அனுபவம் மிக்க அணிகளாக காணப்பட்ட நிலையில் முதல் பாதி ஆட்டத்தில் யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம் ஒரு கோலை பெற்ற நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் உத்வேகத்துடன் இரு அணிகளும் களமிறங்கிய போதிலும் இரு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகம் 01:00 என்ற கோல் கணக்கில் யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி பெற்று மாகாண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .