2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

Kogilavani   / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கண்ணன்


நுவரெலியா விளையாட்டுக் கழகத்தில் மிக நீண்டகாலமாக முயற்சி செய்து வந்த டென்னிஸ் விளையாட்டுத்திடல் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நுவரெலியா மாநகர சபை முதல்வர் மகிந்த தொடம்பே கமகே மற்றும் நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் சுசில் சான்தவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் பிரதி முகாமையாளர் சுனில் வட்டகல ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
இதன் ஆரம்ப கட்ட வேலைகள் மிகவிரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நுவரெலியாவில் உள்ள இளைஞர்களின் உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சின்னையா பாலகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க நுவரெலியா விளையாட்டுக்கழகத்துக்கு கால்நடை மற்றும் கிராமி;ய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உபகரணங்களை மத்திய மாகாண அமைச்சர் ராம் மற்றும் மாகாண  சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், பிலிப்குடார் ஆகியோர் நுவரெலியா விளையாட்டு கழகத்தின் தலைவர் சுசில் சான்தவிடம் கையளித்தனர்.

அத்துடன் நுவரெலியா மாநகர சபை முதல்வர் மகிந்த தொடம்பே கமகே, மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் ஆகியோரும் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சில உடற்பயிற்சி உபகரணங்களையும் வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக நுவரெலியா விளையாட்டு கழகத்தின் தலைவர் சுனில் சாந்த கருத்து தெரிவிக்கையில் கடந்த பல வருடங்களாக நுவரெலியா விளையாட்டு கழகத்துக்கு உடற்பயிற்சி உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுதும் அவை முடியாமல் போய்விட்டது.

இதுதொடர்பாக நாம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கவனததுக்கு  கொண்டு வந்ததை தொடர்ந்து அவர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் நுவரெலியா மாநகர சபை முதல்வர் மகிந்த தொடம்பே கமகே, மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் ஆகியோரும் எமக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்த விளையாட்டு கழகத்தை பொறுத்தவரையில் அனைத்து தரப்பினரும் இங்கு வருகின்றார்கள்.

இங்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகின்றார்கள்.

அவர்களுக்கு மாலை வேளையில் உடற்பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதற்கான இடங்கள் நுவரெலியாவில் இல்லை.

அப்படி இருந்தாலும் அவற்றுக்கு பணம் பாரிய அளவில் அறவிடபடுகின்றன. இதன் காரணமாகவே நாம் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.

எதிர்காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைகள் நுவரெலியா விளையாட்டு கழகத்தில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் தலைவர் சுனில் சான்த தெரிவித்துள்ளார்.இந்த விளையாட்டு கழகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களால் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .