2025 நவம்பர் 19, புதன்கிழமை

கெரம் போட்டியில் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் சாம்பியன்

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்துக்கும் மட்டக்களப்பு, ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்துக்கும் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற கெரம் பிக் மெற்சில் (டீஐபுஆயுவுஊர்) மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் வெற்றி பெற்றுள்ளது.

பாரதி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் சோ.அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரு பாடசாலைகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்த ஆண்டுக்கான கெரம் போட்டியில் சம்பியனாக மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் இந்த கெரம் போட்டியில் கடந்த ஆண்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

வலய மட்டத்தில் நடாத்தப்பட்டு வரும் கெரம் சுற்றுப்போட்டியில் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய 19 வயதுக்குட்பட்ட அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 வயதுக்குட்பட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X