Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் வயதில் சதுரங்க போட்டிகளில் சாதனை படைத்து வரும் 11 வயதான கண்டி திரித்துவக் கல்லுரி மாணவன் KC. ஹரிகிஷன், நடப்பு வருடத்தில் இரட்டை சம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
தமது 2 1/2 வயதில் சதுரங்கப் பயணத்தினை ஆரம்பித்த இவர் பல்வேறு தங்கப்பதக்கங்களுக்கும் வெள்ளிபதக்கங்களுக்கும் உரித்துடையவர்.
தேசிய மட்டத்தில் மட்டுமன்றி ஆசிய, உலக ரீதியில் நடைப்பெறும் போட்டிகளில் கலந்து கொண்டு அபாரத் திறமையினை வெளிக்காட்டியுள்ளார்.
போலாந்து, ரஷ்யா, மலேசியா, இந்தியா (டெல்லி, சென்னை) டுபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ள இவர் கடந்த வாரம் ஏப்ரல் 04, 05 ஆகிய தினங்களில் கொழும்பு மொரட்டுவ வித்தியாலயதில் நடைப்பெற்ற உலக பாடசாலைக்கிடையிலான சதுரங்க போட்டிகளில கலந்துகொண்டார்.
தாய்லாந்து சென்று கலந்து கொள்வதற்கான தெரிவு போட்டியில் கலந்து கொண்டு 6/6 புள்ளியை பெற்று அகில இலங்கை ரீதியில் தங்கப்பதக்கம் பெற்று சம்பியன் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
52 minute ago
1 hours ago