Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தை செப்பனிடும் பணி, உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.எம்.சனூஸினால், நேற்று சனிக்கிழமை (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தோப்பூர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவரும் போக்குவரத்து பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான என்.நாஹூரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் தோப்பூர் மக்களுக்கான உதவி அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து, போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இப்பணி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
தோப்பூர் பிரதேசத்தில் 22 கடினபந்து விளையாட்டு கழகங்கள் கிரிக்கெட் விளையாட்டி வருகின்றனர். எனினும், பொருத்தமான விளையாட்டு மைதானம் இல்லாமையால் அவர்கள் அவதியுறுகின்றனர்.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஐ.எஸ்.சப்ரின், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மி, உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பீ.கே.கலீல், தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.ஹிசாம் மற்றும் மூதூர் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.எம்.நௌபீர் ஆகியோர் பங்கு பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago