Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 04 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பலாலி விண்மீன் அணி சம்பியனாகியது
பருத்தித்துறை லீக்குக்குட்பட்ட 22 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, புதன்கிழமை(29) பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது, பலாலி விண்மீன் அணியை எதிர்த்து வல்வெட்டித்துறை வல்வை அணி மோதியது.
போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை மைதானத்தில் வெளிப்படுத்தின.
முதல்பாதியாட்டத்தில் கோல்கள் பெறப்படவில்லை. இரண்டாவது பாதியாட்டத்தில் விண்மீன் அணியினர் தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி கோலாக்கினர். இறுதியில் விண்மீன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
வல்வை அணியின் 1 வீரருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதுடன், 3 வீரர்களுக்கு மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது. இறுதிப்போட்டியின் நாயகனாக விண்மீன் அணியின் யூட் கெனடி, சிறந்த கோல் காப்பாளராக அதே அணியின் எஸ்.றேடின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025