Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் நடாத்தப்படும் இப்போட்டிகள், அச்சங்க ஆடுகளங்களில் இடம்பெற்று வருகின்றன.
இதில், ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ஷர்மால் திஸாநாயக்க, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். யசித்த டி சில்வாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அவர், 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள தங்கராஜா டினேஷ்காந்தன், ஐந்தாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ஹீரா
ஆஷிக்குக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அவர், 6-2, 5-7, 6-7 (2), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
தன்வீர் ஆஷிக்குக்கும் பிரஷாந்த் செல்வராஜாவுக்குமிடையிலான போட்டியில், 3-1, 6-3, 6-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தன்வீர் ஆஷிக் வெற்றிபெற்றார்.
மூன்றாம் நிலை வீரரான சங்கா அத்துகோரளைக்கும் விமுக்தி டி அல்விஸ§க்குமிடையிலான போட்டியில், 6-2, 0-3 என்ற நிலையில் போட்டி நிலை காணப்பட்ட போது, விமுக்தி டி அல்விஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றதன் காரணமாக, சங்கா அத்துகோரளை வெற்றிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், நான்காம் நிலை வீராங்கனையான மெதிரான சமரசிங்க, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் பிரபுத்தி பெரேராவையும், இரண்டாம் நிலை வீராங்கனையான அம்ரிதா முத்தையா, 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் றுஷிகா விஜேசூரியவையும், மூன்றாம் நிலை வீராங்கனையான நெத்மி வடுகே, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் செதார அம்Nபுவத்தவையும் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago