Editorial / 2026 மே 10 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில
மாலைத்தீவில் நடைபெற்ற 2ஆவது சர்வதேசப் பிரதியேக தடகளப் போட்டிகளில் (International Masters Athletics Championship) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற அணி, ஒட்டுமொத்தமாக 63 பதக்கங்களை வென்று அத்தொடரின் ‘அனுசூரர்’ (Runner-up) பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியீட்டிய குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மாலைத்தீவின் மாலே நகரில் கடந்த மே 05 ஆம் திகதி முதல் மே 07 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, வங்காளதேசம், நேபாளம், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தடகள அணிகள் பங்கேற்றிருந்தன.
இப்போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணி, பின்வரும் பதக்கங்களைச் சுவீகரித்தது:
வெற்றிபெற்ற தடகளக் குழுவினர், மாலைத்தீவிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-112 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago