Mayu / 2024 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்கொலை எண்ணங்கள் அல்லது செயல்களுக்கு இட்டுச்செல்லும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளால் அவதிப்படுபவர்களுக்கு அதற்கான பதிலைப் பெற வழி வகுக்கும் வகையில், இலவச 1333 தொலைபேசி இலக்கம் மற்றும் சேவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "Bikathon 2024" என்ற துவிச்சக்கரவண்டி சவாரி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து வியாழக்கிழமை (29) முதற்கட்டமாக ஆரம்பமாகவுள்ளது.

"Bikethon 2024" சைக்கிள் சவாரியின் மொத்த தூரம் 1333 கிலோ மீற்றராகும். கொழும்பில் இருந்து தொடங்கி 85 ஆவது கிலோமீற்றரான கித்துல்கலையில் முடிவடையும். "உயிர்களைக் காப்பாற்றும் வழியில்" என்ற தொனிப்பொருளிலேயே இந்த சைக்கிள் சவாரி நடைபெறுகின்றது. .
CCC அறக்கட்டளையால் நடத்தப்படும் 1333 நெருக்கடித் தீர்வு சேவையைப் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த "Bikethon 2024" சவாரி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1333 தொலைபேசி நெருக்கடி தீர்வு சேவையானது தற்போது பெருமளவிற்கு ஆதரவளிக்க முடிந்துள்ளதாக CCC அறக்கட்டளையின் நிறுவனர் ஜேதா தேவபுர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ACL கம்பனியின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் CCC அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஜெதா தேவபுர, CCC அறக்கட்டளை இலங்கையின் தலைவர் சுரேஷ் மெண்டிஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
“வருடாந்த சைக்கிள் சவாரி "Bikathon", 1333 கட்டணமில்லா நெருக்கடி தீர்வு சேவையை வெற்றிகரமாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மற்றும் 1333 தொலைபேசி இலக்கமானது இலங்கையில் தற்கொலை வீதத்தை குறைப்பதற்கு பங்களிக்க முடிந்தது“ என்றார்.
தினமும் 8 முதல் 10 இலங்கையர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், இறக்கும் ஒவ்வொருவருக்கும் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் தேவபுர தெரிவித்தார்.
எனவே, 1333 தொலைபேசி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் தற்கொலை எண்ணங்கள் அல்லது செயல்களுக்கு வழிவகுக்கும் பல்வேறு அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளால் துன்புறுத்தப்படுபவர்களை அடையாளம் கண்டு அந்த அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க அவர்களுக்கு ஊக்கமளிப்பதே ஆகுமென தேவபுர தெரிவித்தார்.
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago