2025 ஜூலை 19, சனிக்கிழமை

Open Taekwondo சாம்பியன்ஷிப் 15 பதக்கங்கள்

R.Tharaniya   / 2025 ஜூலை 17 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டு துறையில் புத்தளம் நகர பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கடல் கடந்து வெற்றி பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள். 

மலேசியாவில் நடைபெற்ற17வது CK கிளாசிக் சர்வதேசதிறந்த டைக்வுண்டோ சாம்பியன்ஷிப் (Open Taekwondo) போட்டிகளில் பங்குபற்றிய புத்தளம் மாணவர்கள் 15 க்கும் மேற்பட்ட  பதக்கங்களை வென்று இலங்கை நாட்டுக்கும்,புத்தளம் நகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

பயிற்றுவிப்பாளரும், தடகள வீரரான இஷாரா பியூமாலி சமரகோன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள், புத்தளம் சாந்த அன்றூஸ் தேசிய பாடசாலை மாணவி என்.ஈ.அசேன் விஷ்மிகா மூன்று தங்கப்பதக்கங்கள், புத்தளம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவி ஏ.ஆர்.எப்.ஹனா மஸ்யத் சாரா இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.எச்.ரீமா செய்ன் இரண்டு தங்கப்பதக்கங்கள், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.ஷாதின் அஹ்மத் மூன்று வெள்ளி பதக்கங்கள் என 15 பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டியுள்ளனர்.

இந்த வெற்றி வீரர்கள் ஐவரையும் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்கின்ற நிகழ்வு புத்தளம் நகர மத்தியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்றது. புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களோடு புத்தளம் பீனிக்ஸ் அகடமி நிர்வாகமும் இணைந்து இந்த ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்திருக்கின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையிலே நடைபெற்ற இது தொடர்பான பிரதான நிகழ்விலே புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட வெற்றி வீரர்கள் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். 

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X