Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்
வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டப் போட்டிகள் நடைபெறும் நெல்லியடிப் பகுதியில் அடிப்படை வசதி இன்றி தனியார் மைதானங்களில் நேற்று முன்தினம் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லியடியிலுள்ள நான்கு மைதானங்களில் இப்போட்டிகள் இடம்பெற்ற நிலையில் மலசல கூடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி காணப்பட்டதாக மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒரு தனியார் விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் கள்ளுத் தவறணை நிலையமும் காணப்பட்டதுடன் குடிநீர் அயல் வீட்டில் இருந்தே மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டமை கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் ராஜசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, “குறித்த பிரச்சினை தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுத்திருப்போம். மாணவர் நீண்ட நாள் தங்குதல், அவர்களுடைய செலவுகளை கருத்திற்கொண்டு குறித்த நான்கு மைதானங்களையும் தயார்படுத்தியிருந்தோம். பிரச்சினையான மைதானத்தை மாற்றி பிறிதொரு பாடசாலை மைதானத்துக்கு போட்டிகளை மாற்ற ஏற்பாடு செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
16 minute ago
20 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
4 hours ago
5 hours ago