R.Tharaniya / 2025 நவம்பர் 02 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளின் முடிவில் 2-0 என நியூஸிலாந்து தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் சனிக்கிழமை (01) நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதில், இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.நியூஸிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டும் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 44.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி கண்டது.
28 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago