Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ்
மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகத்தின் ஐந்தாவது வருடாந்த பொதுக் கூட்டமும், நிர்வாகத் தெரிவும், வீரர்கள் கெளரவிப்பும் கழகத்தின் பொதுச் செயலாளர் அல்-ஹாஜ் ஏ. கமால்தீன் ஒருங்கிணைப்பில் கழகத்தின் தலைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில் மருதமுனை எம்.சி ரெஸ்டில் அண்மையில் நடைபெற்றது.
மூன்று கட்டங்களாக நினைவு கூறப்பட்ட இந்நிகழ்வில் கழகத்தின் ஸ்தாபகர் எம்.எம். சஹாப்தீன், முதல் வீரர் ஏ.பி. இம்தியாஸ் மற்றும் கழகத்தின் முதலாவது தலைவர் ஏ.ஆர். சமியூன், தென்கிழக்கு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவான கழகத்தின் வீரர்கள் இருவர், கழக நிர்வாகிகள், போஷகர்கள், ஆலோசகர்கள் மற்றும் கனிஷ்ட, சிரேஷ்ட வீரர்கள் என பலர் நினைவுச் சின்னம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பதிதியாகக் கலந்து கொண்ட கழகத்தின் தவிசாளரும், கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான ஏ.ஆர்.அமீர் சிறப்புரை நிகழ்த்தினார், கழகத்தின் பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான எஸ். அஸீம் விசேட உரையை நிகழ்த்தினார்.
கலை, கலாசார நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான
நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் கழகத்தின் போஷகர்கள், ஆலோசகர்கள், ஆதரவாளர்கள், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
17 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
5 hours ago