Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 25 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண 16 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாடடத் தொடரில் காலிறுதிப் போட்டிக்கு கல்முனை சாஹிரா கல்லூரி முன்னேறியிருந்தது.
நீண்ட இடைவெளியின் பின்னர் சாஹிராவில் மேசைப்பந்தாட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், திருகோணமலை சென். மேரிஸ் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (23), புதன்கிழமை (24) நடைபெற்ற இப்போட்டியின் முதல் போட்டியில் திருகோணமலை இந்துக் கல்லூரியோடு விளையாடி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்ததோடு காலிறுதி வரை முன்னேறியது.
இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் மற்றும் பிரதி அதிபர்கள், இவ்விளையாட்டை பாடசாலையில் மீண்டும் அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் எம்.எச்.எம். முஸ்தன்சிர் மற்றும் மாணவர்களை அழைத்துச் செல்ல உதவியாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் எம்.எம். றஜீப் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான மேசைப்பந்தாட்டப் பலகையைப் பெற ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை பாடசாலை சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
49 minute ago
1 hours ago