Shanmugan Murugavel / 2022 மார்ச் 16 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் கடினபந்து கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் இத்தொடரில், சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற நிந்தவூர் லகான்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கெதிரான போட்டியில் வென்றே டொப்ரேங்க் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டொப்ரேங்க் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான்ஸ் விளையாட்டுக் கழகம் 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 98 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டொப்ரேங்க், 14.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக, டொப்ரேங்க் விளையாட்டுக் கழகத்தின் முஹம்மட் சிரோஸ் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கெனவே, காலிறுதிப் போட்டிக்கு கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போட்டிக்கு ஓய்வுபெற்ற சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். அஸ்ஹர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026