2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு

R.Tharaniya   / 2025 நவம்பர் 23 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு குராக்கோ முதல்முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் பிரவேசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சாதனையை படைத்தது.

'பி’ பிரிவில் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் அரங்கேறிய குராக்கோ- ஜமைக்கா அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. லீக் முடிவில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள குராக்கோ 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குள் கால்பதித்தது.

கரிபீயன் தீவுகளில் ஒன்றான குராக்கோவில் தற்போது 1 லட்சத்து 56 ஆயிரத்து 115 மக்கள் வசிக்கிறார்கள். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ஐஸ்லாந்து தகுதி கண்ட போது அந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. அதுவே முன்னதாக உலக கோப்பை போட்டிக்குள் கால்பதித்த குட்டி தேசமாக இருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X