2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்

Mayu   / 2024 ஜூன் 17 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி பிலிமந்தலாவ மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில் சி.ஹரினி 16 வயதின்கீழ் பங்குபற்றி (73 கிலோகிராம்) முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், எஸ்.கிஷோத்திகா 18 வயதின்கீழ பங்குபற்றி (93 கிலோகிராம்) இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், வி.பிரஷா 18 வயதின்கீழ் பங்குபற்றி (107 கிலோகிராம்) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X