2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சம்பியனான கலைமகள் வித்தியாலத்தை பாராட்டிய ரவிகரன்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 15 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- விஜயரத்தினம் சரவணன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16, 18 பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் சம்பியனான முல்லைத்தீவு - முள்ளியவளை, கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் திங்கள்கிழமை (14) நேரில் சென்று வாழ்த்தினார்.

அத்தோடு போட்டிகளில் பங்கேற்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் நிலமைகள் மற்றும் சவால்கள் குறித்தும் வீராங்கனைகளிடமும், பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபரிடமும் ரவிகரன் இதன்போது கேட்டறிந்துகொண்டதுடன் அந்தச் சிக்கல் நிலமைகள், சவால்களைத் தீர்ப்பதற்கு தம்மாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .